வடக்கு – கிழக்கு பகுதிக்கு 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 19th, 2016

வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் முன்னேற்றகரமான நிலைப்பாடே இந்த வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இதற்கான திட்டங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்து என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் –

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் அவர்களது வீடுகள் பல அழிந்தும் சேதமடைந்தும் இருப்பதாலும் அவர்களுக்கான வீடுகளின்மை பிரச்சினையானது இன்னும் தீர்ந்ததாக இல்லை. ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த 65000 பொருத்து வீடுகளை எமது மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்புகின்ற நிலையிலும் ஒரு சிலரது அரசியல் சுயலாபங்கள் காரணமாக அத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் எமது மக்களின் விருப்பங்களை அறிந்து அத் திட்டத்தை தற்காலிகத் திட்டமாக செயற்படுத்த அரசு முன்வர வேண்டும் என நான் இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

07

Related posts:


நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது அரசின் கடப்பாடாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
ஈ.பி.டி.பி. கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் சர்வலோக நிவாரணியாக அமையும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ...
அமைச்சர் டக்ளஸின் ஆரோக்கியமான கோரிக்கைகளினால் காத்திரமான தீர்மானங்கள் -யாழ். மாவட்ட செயலகத்தில் சம்ப...