வடக்கு கடலில் கொடுவா மீன் வளர்ப்பை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, October 7th, 2021

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஏற்படுத்திக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு தொழில் முயற்சியை மேற்கொள்ள தலா 250 000 ரூபாய் முதலீட்டு உதவியை தனியாரிடமிருந்து பெற்றுக் கொடுப்பதுடன்

பயனாளிகளுக்கு தேவையான மீன்வளர்ப்புக்கான பயிற்சியை வழங்கவும், மீனுக்கான உணவைப் பெற்றுக்கொடுப்பது மற்றும் விற்பனை செய்யும் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் நாரா மற்றும நக்டா நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் மீன் வளர்ப்பு நிறுவனமான ஓசன் பிக் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர், மீன்பிடித் திணைக்களத்தின் துறைசார்த்த அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

000

Related posts:

தெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்ட...