இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் – நாடாளுமன்றில டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016

எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,  எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு அதனை எமது கல்வித்துறையில் ஆரம்பந்தொட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

ஈ.பி.டி.பி. கட்சியினராகிய நாம். தேசிய நீரோட்டத்திற்குள் பிரவேசித்த காலம் முதல் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியும், அதனை எமது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுமே செயற்பட்டு வருகின்றோம் என்பதை இங்கு மீண்டும், மீண்டும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

அந்த வகையில் எங்களது நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகள் மற்றும் கருத்துக்களால் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் எமது மக்களிடையே தேசிய நல்லிணக்கச் சிந்தனைகளை நாம் ஏற்படுத்தியுள்ள அளவுக்கு, வேறு எந்த சக்திகளாலும் ஏற்படுத்தியிருக்க முடியாது என்றே நான் கருதுகின்றேன்.

அனைத்து தரத்தினாலான மக்களிடையேயும் நாம் இந்த தேசிய நல்லிணக்கச் சிந்தனைகளை சமாந்தரமாக வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டு வருகின்றோம் என்பதை நான் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இதனை நாம் உளப்பூர்வமாக மேற்கொண்டு வருவதால்தான் இது சாத்தியமாகிறது. அதைவிடுத்து, வெறும் கடமைக்காக செய்யப் போனால், அது ஒரு போதும் வெற்றியளிக்காது.

எனவே, எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,  எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு அதனை எமது கல்வித்துறையில் ஆரம்பந்தொட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts:

தமிழ் மக்களது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்ய எந்தச் சவால்களைய...
தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன - அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எ...
மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவ...