வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021

வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படுகின்ற போது அவற்றிற்கு பங்களிப்பதற்கு இந்தியா ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் ஓலைத்தொடுவாயில்  கடலட்டை இனப்பெருக்க நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை கடற்றொழிலாளர்களின் முன்னேற்றம் இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தியதாகவும், குறிப்பாக வடக்கின் பருத்தித்துறை, குருநகர், பேசாலை போன்ற பிரதேசங்களில் மீன்பிடித் துறைமுகங்களின் உருவாக்கத்தில் இந்தியா பங்களிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் அமைக்கப்படவிருந்த துறைமுகங்கள் சிலரின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட நிலையில், குறித்த துறைமுகங்களை உருவாக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க...
கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை - 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்ச...
தோழர் சந்துருவின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை!