வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

Wednesday, December 6th, 2017

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுமார் 400 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதார மையங்களாக விளங்குகின்ற மாதகல் கடற்கரைப் பிரதேசத்திலுள்ள சம்பில்துறை மாதகல்துறை மற்றும் குசுமந்துரை ஆகிய மூன்று மீன்பிடித் துறைமுகங்கள் சுமார் 30 வருட காலமாகப் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.  எனவே மேற்படி மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும்  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளுக்கமைய யாழ் மாவட்டத்தில் சுமார் 700 19 அடி  படகுகள் இதுவரையில்  பதிவு செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிய வருகின்றது. இவை அனைத்தும் இனங்காணப்பட்டு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

வடமராட்சி பகுதியில் கடந்த காலங்கள் வான் தோன்றுகின்ற நடவடிக்கைகள் சில மேற்கொண்டிருந்த போதிலும் அப் பகுதிக்குள் மேலும் 10 வான்கள் தோன்ற வேண்டியுள்ளன.

மேலும் வெளிச்ச வீடுகள் மற்றும் சுமார் 30 இறங்குதுறைகள் என்பன யாழ் மாவட்டத்தில்; அமைக்கப்பட வேண்டியத் தேவைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts:


கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகி...
கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துர...