வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் தினேஸ் குணவர்த்தன இடையில் விசேட கலந்துரையாடல்!
Wednesday, February 23rd, 2022
வடக்கு மாகாணத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கு இடையில் இன்று நடைபெற்றது.
கல்வி அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தினை மேலும் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் வடக்கு கல்விச் சமூகத்தினரால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கல்வி தொடர்பான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் திருமதி அம்பிகை போர்மன மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
Related posts:
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் - டக்ளஸ் எம்பி ...
வவுனியா மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்...
|
|
|


