வடக்கிற்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அநுராதபுரத்துக்கு பாரப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை கைவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, March 3rd, 2021

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தினால் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் தொடர்பான பணிகளை அநுராதபுர மாவட்ட காரியாலயத்திற்கு பாரப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை கைவிடுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் முழுமைப்படுத்தப்படாத வீட்டுத் திட்டங்கள் அனைத்தும் நிறைவு செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இன்றைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மணல் அகழ்வு உட்பட்ட சட்ட விரோத மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சிவில் விழிப்புக் குழுக்களை அமைத்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விடுவிக்கப்படாத காணிகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடியுள்ளதாகவும், அதுதொடர்பான புள்ளிவிபரங்களை தொகுத்து முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாகவேனும் மக்களிடம் கையளிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த நிலையில், விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் அனைத்தும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் - மண்டைதீவில் டக்...
மாணவக் கண்மணிகளின் எதிர்காலம் சிறப்புற அமைய வாழ்த்துகின்றேன் - சித்தியெய்திய மாணவர்களுக்கான  வாழ்த்த...
அட்டைத் துப்பாக்கிகளை நிஜத் துப்பாக்கியாக்காதீர்கள் - கொற்றாவத்தையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!