பொது இணக்கப்பாடே நிரந்தர தீர்வுகளுக்கு வழிசமைக்கும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019


கருத்துக்களை ஒரு பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கும்போதுதான் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை அடையமுடியும். அத்தகையவொரு பொது இணக்கப்பாட்டுடனான முடிவுகளை நோக்கியதான முன்னெடுப்புக்களை அடைவதற்காக நாம் ஒருமித்து உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் ஆலோசனை சபைக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது இனத்திற்கான உரிமைப் பயணத்தில் எம்மிடம் ஒரு உறுதிமிக்க கொள்கையுடனான வழிமுறை உண்டு. அதுமட்டுமல்லாது எம்மீதும் எமது வழிமுறை மூலம் எமது மக்களுக்கான அபிலாசைகளை வெகன்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் அனுபவமும் எமக்கு அதிகம் உண்டு.

கடந்தகாலத்தில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது யாழ் மாநகரசபையை சிறப்பாக வழிநடத்தி இங்குள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்திருந்திருக்கின்றோம்.

தற்போது ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ளவர்கள் தத்தமது சுயநலன்களுக்காகவே  யாழ் மாநகர சபையை கையாள்கின்றனர். மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இன்றைய மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் துணையாகவும் இருக்க முடியாது.

மக்கள் நலன்கருதியதான ஒரு நிலைப்பாட்டுடன் நாம் எமது செய்ற்பாடுகளை முன்னெடுக்கும்போது சபையில் ஆளும் தரப்பினர் முன்னெடுக்கும் ஊழல்களையும் உள்நோக்கத்ததையும் மக்களிடம் வெளிச்சம்போட்டுக் காட்ட முடியும்.

நாம் யாழ் மாநகர சபையில் எதிர்க்கட்சியாகவே இருந்து செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில் எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து மக்கள் நலன்களை முன்னிறுத்தியதாக எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: