ரணிலின் வெற்றியில் நாமும் பங்குதார்ர்களாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, August 25th, 2024

இருண்டு போன நாட்டை வீழ்ச்சியிலிருந்த  மீட்சிபெற செய்த ரணில் விக்ரமசிங்க அவர்களே  மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என  நம்பிக்கை தெரிவித்த அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா அந்த வெற்றியில் நாமும் பங்குதார்ர்களாக ஈபிடிபியோடு அணி திரளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார் .

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலான ஈபிடிபி கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்கு ஆதரவளித்து செயற்படுகின்ற நிலையில் இன்று மட்டக்களப்பில் மக்களுடன் இடம்பெற்ற  கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். 

மேற்படி கூட்டம். மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிச்சவீட்டுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது . அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தலமையல் இடம்பெற்ற கூட்டத்தில்  ஈபிடிபி கட்சியின் மாவட்ட நிர்வாகத் தோழர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் , ஆதரவாளர்கள் மொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

000

Related posts:


யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்:என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் - மன்னாரில் அமைச...
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!