யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை – மிருசுவில் வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 29th, 2020

யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாழ்கை போராட்டம் தொடருவதற்கு கடந்த காலங்களில் மக்கள் மேற்கொண்ட தெரிவுகளே காரணம் எனவும் தெரிவித்தார்.

தென்மாராட்சி, மிருசுவில் வடக்கு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் தெ்ாடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், வரவிருக்கின்ற சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்துவார்களாயின் மக்களின் வாழ்கை போராட்டத்திற்கும் தன்னால் முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்வும் அபிவிருத்தியும் நீங்கள் தேர்தலில் தெரிவு செய்யும் பிரதிநிதிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. நீங்கள் உங்கள் கோரிக்கைகளை என்னிடம்  முன் வைக்கின்றீர்கள்.  அதேபோன்று நானும உரிமையுடன் உங்களிடம் எனக்கு பலமான ஆணையினை தருமாறு கோரி வருகின்றேன்.

இருப்பினும் மக்கள் போலி அரசியல் தலைமைகளின் பின்னால்தான் அணிதிரளுகின்றனர்,   அன்றும், இன்றும் மக்களோடு மக்களாகவே வாழ்பவன்  என்ற உரிமையுடன் கேட்பது இம்முறை நீங்கள் எனக்கு ஆதிக ஆசனங்களை வழங்கி கரங்களைப் பலப்படுத்தங்கள் உங்களின் வாழ்வை நான் வலுப்படுத்துகின்றேன்” என்று அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவான...
தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ...
பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்...