சாதகமான அரசியல் சூழலையை எமக்கானதாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, February 17th, 2024

சமகால அரியல் சூழல் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்தி எமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முழுமையாக பாடுபடவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (17.02.2024) நடைபெற்ற கட்சியின் யாழ்.மாவட்டத்தின்  பிரதேச நிர்வாக செயலாளர்கள் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

எமது கட்சிக்கென்று நிலையான ஒரு கொள்கையும் வேலைத்திட்டமும் இருக்கின்றது. அதுவே சரியானது என்று இன்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் எமக்குமுன் இருக்கும் காலச்சூழல்  எமக்கு சாதகமானதா அல்லது  பாதகமானதா என்பது குறித்து விரிவாக ஆரய்ந்து எம்முன் வருகின்ற ஒவ்வொரு  சந்தர்ப்பங்களையும் நாம் எமக்கானதாக உருவாக்கி கொள்ள     வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருக்கின்றது.

இதேநேரம் தற்போது சுயநலங்களுக்கான தேவைகளுக்காக போராட்டங்கள் என்ற போர்வையில் மக்களின் நலன்களும் சேவைகளும் குழப்பப்படும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை போராட்டங்கள் மக்களின் நலன் சார்ந்தது எனின் அவை நியாயமனவைதான். ஆனால் திட்டமிட்டு குழப்பங்களையும் ஒருசிலர் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தவகையில் மக்கள் நலன்களையும் சமூக வளர்ச்சியையும் மையப்படுத்தியதான வகையில் எமது ஒவ்வொருவரது செயற்பாடுகளும் இருப்பது அவசியம் எனவும்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...