யுத்தத்தின் பின் வடக்கில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருதல் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, January 10th, 2019

வடக்கு மகாணத்தில் கடந்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்வரப்பட்டதன் பின்னர், வடக்கிலே ஒரு கைத்தொழில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடந்திருந்தால், இன்று வடக்கு மாகாண மக்கள் இந்தளவிற்கு பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை – ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கiயில் –

ஆனால், வடக்கில் அது நடைபெற்றிருக்கவில்லை. மாறாக அதீத வர்த்தகப் பொருளதாரமே உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக ,ன்று எமது மக்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு வந்துள்ள அதேவேளை, எமது பகுதியானது போதைப் பொருள் மற்றும் கேரளா கஞ்சா வர்த்தகத்திற்கும், கடத்தலுக்கும் ஒரு முக்கிய ,டமாக மாறிவிட்டுள்ளது. இதன் காரணமாகவும் அப்பகுதி மிகுந்த பாதிப்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்துள்ள மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கையினைப் பார்க்கின்றபோது

2008ல்  1375 ஆகவும், 2009ல் 901 ஆகவும், 2010ல் 741 ஆகவும், 2011ல் 724 ஆகவும், 2012ல் 646 ஆகவும், 2013ல் 586 ஆகவும், 2014ல் 548 ஆகவும், 2015ல் 476 ஆகவும், 2016ல் 502 ஆகவும், 2017ல் 467 ஆகவும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையில் 214 ஆகவும் இருந்துள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக ஒரு செய்திக் குறிப்பிலிருந்து தெரிய வருகின்றன.

மொத்தமாக கடந்த 10 ஆண்டுகளில் 7183 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், ,வை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6431 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாக மேலும் இந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

,தனைப் பார்க்கின்றபோது 6431 கொலைகள் தொடர்பில் 6431 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு கொலை தொடர்பில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் என்ற வகையிலும் 6431 பேர் 6431 கொலைகளிலும் குறைந்த எண்ணிக்கையான கொலைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

ஆக, மொத்தமாக கடந்த பத்து ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற 7183 கொலைகள் தொடர்பில் – அதாவது அனைத்து கொலைகள் தொடர்பிலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

Related posts:

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம்...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுற - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக...