யாழ் மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நீதியைப் பெற்றுத தருமாறு கோரிக்கை!

Thursday, March 17th, 2022

கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள யாழ் மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நீதியைப் பெற்றுத தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்று வருகைதந்த யாழ் மாவட்ட காணி மத்தியஸ்தர் சபை தலைவர் உட்பட்ட 14 உறுப்பினர்கள், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இவ்வருடம் பெப்ரவரி வரையான 5 மாதங்களாக தமக்கான ஊதியத்தை வழங்குவதற்கு யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகம் உட்பட ஏனைய மாவட்ட செயலகங்கினால் அந்தந்ந மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையினருக்கான ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுகின்ற நிலையில், யாழ் மாவட்ட செயலகம் தமக்கான ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இழுத்தடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சுமார் 5 மாதங்களாக ஊதியம் கிடைக்காத நிலையில் எதிர்கொள்ளக்கூடிய வாழ்வாதார சவால்களை புரிந்து கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். – 17.03.2022

Related posts:

மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது - சக்தி தொலைக்காட்ச...
மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய...
அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்...
காவலூர் - காரைநகர் - ஒழுங்குபடுத்தப்பட்ட படகுச் சேவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் - அமைச்சர்...
புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் - முன்னேற்றகரமான செ...