யாழ் மத்திய பேருந்து நிலை பயணிகள் நலன்கருதி பொலிஸ் காவலரண் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.!

Wednesday, April 3rd, 2024


………..
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும்  வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு   துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள்,  இ.போ.ச அதிகாரிகள், பொலிசார், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைத்தல் தொடர்பில்  ஆராயப்பட்டதுடன் காவலரணை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை பொலிசாருக்கு ஏற்படுத்தி கொடுக்குவாறு இ.போ.ச அதிகாதிகளுக்கு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது .

அத்துடன் பேருந்து நிலைய வளாகத்தில்  உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகதியங்ககை கருத்தில் கொண்டு அக்கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது.

மேலும் பேருந்து வளாகத்தின் தூய்மை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி பயணிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் இ.போ.ச அதிகாரிகளுக்கு அமைச்சரால் வலியுறுத்தப்பட்டதுடன் குறித்த நடவடிக்கைகளை அடுத்த 10 நாள்களுக்குள் எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது

சாரதி மற்றும் நடத்துனருக்கான ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும்  குறித்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்படமை குறிப்பிடத்தக்கது.


முன்பதாக இன்று(03.04.2024) பிற்பகல் பேதுந்து நிலையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்த நிலையிலேயே குறித்த கூட்டம் நடைபெற்று இவ்வாறு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நா...
வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர...
ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் -...