யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்து வைப்பு!
Thursday, October 12th, 2023
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் நேற்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் நடாவெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
உடற்பயிற்சி கூடத்திறப்பு விழா கல்லூரி அதிபர் சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் றணசிங்க, வடமாகான கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன்
கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் த...
நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் - கட்டுப்படுத்த அரசாங்கம் தீவ...
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...
|
|
|


