யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த பராமரிப்புகள் தற்போது காணாமற்போய்விட்டன – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Saturday, November 25th, 2017

இரயில் போக்குவரத்துச் சேவையின் தேவையே எமது நாட்டில் இலகுவான போக்குவரத்திற்கான எதிர்கால கேள்வியாக இருக்கப் போகின்றது.

அதற்குரிய வசதிகள் இரயில்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக, இன்று புகையிரதத் திணைக்களத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற வடக்கு நோக்கியதான சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இரயில்களைப் பார்க்கின்றபோது, பயணிகள் போக்குவரத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற வகையிலேயே, போதிய பராமரிப்புகளும் இன்றிய நிலையில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டபோது, ஓரிரு இரயில்களில் காணப்பட்ட சுத்தமானது, அதன் பின்னர் ஒருபோதுமே காணப்படாத வகையிலேயே இருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நீர் வசதிகள், மலசலகூடங்கள் சுத்தம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும். கட்டணங்கள் அறிவிடப்படுகின்ற நிலையிலாவது சேவைகளை ஒழுங்காக வழங்குவதற்கு முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts:


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களையும் சுமக்க வேண்டும் - அமைச்சர் டக்...
சுகாதார தொண்டர் நியமனம் - ஜனாதிபதியின் தீர்மானத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!
வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற...