முல்லையில் அழிவுகளுக்கான தார்மீக பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, June 29th, 2020

“மக்கள் சந்தித்த அழிவுகளுக்கான தார்மீக பொறுப்பேற்று ஜனநாயக அரசிலுக்குள் பிரவேசித்த நான், அதே பொறுப்புணர்வோடு முல்லைத்தீவிற்கும் வந்திருக்கி்றேன்” என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டாரத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

வருகின்ற சந்தர்ப்பம் ஒரு அரசியல்  மாற்றத்திற்கான  நல்ல ஆரம்பமே.  ஒன்றுபடும் மக்களால் எதையும் சாதிக்க முடியும்  இது உங்களுக்கான தருணம்.தமிழ் அரசியலில் மக்களிடம் தேசியம் என்றும், ஜக்கியம் என்றும், ஒற்றுமை எனக்கூறி ஆணை கேட்டவர்கள், போலி வாக்குறுகளை தந்தவர்கள் கடந்த பத்து வருடங்கள்  சாதித்தவைகள் என்ன?

ஆகவே இனியும் நீங்கள் ஏமாற்றும் தலைமைகளின் பின்னால் சென்றுவிடாது எம்மை பலப்படுத்துங்கள்.

நீங்கள் வீணைக்கு வாக்களித்து அதிகப்படியான ஆசனங்களை தருவீர்களாக இருந்தால் குறைந்தது மூன்று வருடங்களுக்குள் தமிழர் தரப்பில் இருக்கும் பிரச்சினைகளானஅபிவிருத்தி, அன்றாடப் பிரச்சனை மற்றும் அரசியல் உரிமை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன்.

எனவே என்னை நம்புங்கள் நான் கூறுபவைகள் சத்திய வாக்குகள்.  கடந்த காலங்களில் நான் கூறியதை கேட்டிருப்பீர்களாக இருந்திருப்பின், பட்ட துன்பங்கள் கண்ட அழிவுகள் ஏற்பட்டிருக்காது.

ஆகவே நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தலில் வீணைக்கு வாக்களித்து வெற்றி வாய்ப்பை தாருங்கள் எனக் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்நப்பட்ட தரப்புக்களுடன் ஆராய்ந்து தீர்த்து வைக்கும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துயரயாடல், முல்லைத்தீவு கரைத்துறைப பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனியாரால் அபகரிக்கப்பட்ட “பாடுகளை” மீளவும் பெற்றுத்தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கச்சாய...
கொரோனாவிற்கு பின்னரான நிலவரங்களைக் கையாளும் நோக்கோடு, சாவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் ம...
மீன்கள் இருக்கின்ற இடத்தை கண்டுபிடிக்க பலநாள் படகுகளில் கருவிகள் - தொடர்புபட்ட நிறுவனத்தினர் அமைச்சர...