பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கை நடைமுறையில் உள்ளதா? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, March 23rd, 2018

பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கைக்கு அமைவாக, ‘நோயாளர்களுக்கு மருந்து வகைகள் பரிந்துரை செய்யப்படுகின்றபோது, அவற்றை மருந்துகளின் பெயர்களைக் கொண்டு மாத்திரமே பரிந்துரை செய்யப்படல் வேண்டும் என்ற சட்டத்தை அச்சொட்டாக செயற்படுத்த வேண்டும்’;  என்ற விடயத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தரப்புகளில் கூறப்பட்டு வந்தாலும், அது நடைமுறையில் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் புலமைச் சொத்து சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மருந்து வகைகளின் பெயர்களைக் கொண்டு பரிந்துரைக்கப்படுகின்ற மருந்து வகைளின் விலைகள், வர்த்தக பெயர்களைக் கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்ற மருந்து வகைகளின் விலைகளைவிட குறைவாக இருப்பதும், இதனால் நோயாளர்களுக்கு போதிய நன்மைகள் பொருளாதார ரீதியில் ஏற்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டே மேற்படி விடயத்தை பேராசிரியிர் சேனக பிபிலே தனது கொள்கையாகக் கொண்டு வந்துள்ளார் என்றே நம்ப முடிகின்றது.

ஒரு நோயாளர், வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையே போராட வேண்டிய நிலையில், மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகின்ற மருந்துகளின் விலை எதுவாகினும் அவற்றை அவர் தனியார் மருந்தகங்களில் வாங்கும் நிலக்கே தள்ளப்படுகின்றார். இதன்போது, பேரம் பேசிக் கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றும்கூட அரச மருத்துவமனைகளுக்குச் செல்கின்ற நோயாளர்கள் மருந்து வகைகளை வெளியில் வாங்கும் நிலைமைகளிலிருந்து  மீளாத நிலைமைகளே காணப்படுகின்றன.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நோயாளர்களது இரசாயண கூட பரிசோதனைகள் வெளியிடங்களில் மேற்கொள்ளப்படுவது தடை செய்யப்படுமெனக் கூறப்பட்டது. எனினும், அதற்கான சேவைகள் வழங்குதல்களுக்காக அரச மருத்துவமனை கட்டமைப்பில் வலுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வில்லை.

மேலும், ஊ னு ளுஉயnஇ  ஆசுஐ ளுஉயnஇ ஓ சுயல  உள்ளிட்ட பல்வேறு இரத்த பரிசோதனைகளும் அரச மருத்துவ மனைகளில் இலவசமாக மேற்கொள்ளக் கூடியதாக இருப்பினும், அதற்கு நீண்ட காலமெடுப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில் நோயாளர்கள் குணமடையும் வாய்ப்பினை நோக்கிச் செல்வதைவிட, மரணத்தை நோக்கிச் செல்கின்ற சந்தர்ப்பங்களே ஏராளமாகக் காணப்படுகின்றன.

பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களே அதிகமாக அரச மருத்துவ மனைகளை நாடுகின்ற நிலையில், அரச மருத்துவ மனைகளால் அவர்களது தேவைகளை உரிய காலகட்டுத்துள் நிறைவேற்ற இயலாத காரணத்தினால், அவர்கள் கடன்பட்டாவது தனியார் மருந்தகங்களை, இரசாயண கூடங்களை நாட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நாட்டில் அரச மருத்துவமனைகளை அண்டியதாக உருவாகியுள்ள தனியார் இரசாயண கூடங்களின் எண்ணிக்கைளை அவதானித்தால் இந்த நிலைமை நன்றாகப் புலப்படும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:

பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் -...
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் -  டக்ளஸ...
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...