முல்லைத்தீவு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் !

Sunday, August 12th, 2018

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது,

கடந்த இரண்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இக்கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பொருட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளடங்கிய குழுவினர் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தொடர்ச்சியாக அத்துமீறியும், தடைசெய்யப்பட்டதுமான தொழில் முறைகளினால் தமது தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்படும் அதேவேளை, தமது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் முழமையாக பாதிக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் உரிய தீர்வு எட்டப்படாவிடின் தமது போராட்டம் தொடரும் என்றும் முன்னர் கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இருந்த போதிலும் அமைச்சர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

117fdb99-47ec-4195-8e24-ddcf5dd827dd

50aeabfd-8762-4593-bc53-e64d368734d6

6284ba1f-f56f-4af7-91e8-f8fa2dc06444

264c79f4-c708-4950-9e88-88b3781c19d0

Related posts:

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூறியிருக்கும் இந்திய பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ...
பேலியகொட மீன் சந்தையின் இடையூறுகளை களைவதற்கு நடவடிக்கை - அமைச்சர்களான டக்ளஸ் - ஜோன்ஸ்ரன் நேரடிக் கள ...

தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதால் நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கும் - நாடாளுமன...
கொழும்புக் கழிவுகளுக்கே தீர்வில்லை : வெளிநாட்டுக் கழிவுகளால் யாருக்கு இலாபம்? – நாடாளுமன்றில் டக்ளஸ்...
ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடி...