நெடுந்தீவில் பணிபுரியும் அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Sunday, November 27th, 2016

யாழ். மாவட்டத்தில் கஷ்டப் பகுதிகளாகக் காணப்படுகின்ற தீவுப் பகுதிகளுக்கு கடமை நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களது தேவைகள் கருதியும் போக்குவரத்து கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடந்த காலத்தில் பிரதேச செயலகங்களுக்கான புதிய கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் மாநாட்டு மண்டபங்கள் அமையப் பெற்றுள்ள போதிலும் அந்த மாநாட்டு மண்டபங்களுக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் ஒலி அமைப்புத் தொகுதிகள் போதியளவு காணப்படாத நிலையே உள்ளது. எனவே இவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கஸ்டப் பகுதிகளாகக் காணப்படுகின்ற தீவுப் பகுதிகளுக்கு கடமை நிமித்தம் செல்கின்ற அரச அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களது தேவைகள் கருதியும் தற்போது நெடுந்தீவுக்கு கடமைகள் நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற 2000. 00 ரூபா போக்குவரத்து கொடுப்பனவினை 5000.00 ரூபாவாக உயர்த்துவதற்கும்  நயினாதீவு அனலைதீவு மற்றும் எழுவைத்தீவு போன்ற கஸ்டப்பகுதிகளுக்கு கடமைகள் நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகளுக்கு தற்போது எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படாத நிலையில இவர்களுக்கு குறைந்தபட்சம் மாதாந்தம் 3000.00 ரூபா கொடுப்பனவினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவும்படியும் அரச அதிகாரிகள் இவ்வாறான கஸ்டப் பகுதிகளில் சிறிது காலமாவது தங்களது கடமைகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் கௌரவ அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Untitled-1 copy

Related posts:

ஆற்றலும் அக்கறையும் உள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் - பொன்நகரில் டக்ளஸ் தேவானந்தா!
அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு - துரிதப்படுத்துமாறு து...
கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார் வளங்கள் - ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர...