மக்களிடம் பெறுகின்ற வாக்குகள் அந்த மக்களின் வெற்றிக்காக மாறறப்பட வேண்டும்; – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018

இந்த அரசு ஆரம்பந்தொட்டு வலியுறுத்தி வருகின்ற தேசிய நல்லிணக்கம் குறித்த விடயத்தில் நாம் வெற்றி காண வேண்டும். அதற்காக, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கானத் தீர்வு உட்பட எமது மக்களின் உணர்வு ரீதியிலான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான உறவுகளின் போராட்டமானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பித்து இற்றைக்கு சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த உறவுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றனவே அன்றி, இதுவரையில் இவர்களது பிரச்சினைக்கு எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.

தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் இன்று 355 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சாத்தியமான ஏற்பாடுகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமை காரணமாக பல்வேறு பகுதிகளைவிட்டு வெளியேறுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.

வலிகாமம் வடக்கு மக்களில் இன்னமும் கணிசமான தொகையினர் மீளக் குடியேற்றப்படாத நிலையில், முகாம்களில் அவர்கள் உள, உடல் ரீதியில் அனுபவித்து வருகின்ற துன்ப, துயரங்கள் ஏராளமாகும்.

இந்த மக்கள் தங்களைப் பாதித்து வருகின்ற விடயங்களிலிருந்து, தங்களை மீட்டெடுப்பதற்காகவே தமது பிரதிநிதிகள் என்ற ரீதியில் வாக்களித்து, நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர். அந்த வகையில், அம் மக்களுக்கு உதவ முடியாதபோது நாடாளுமன்;ற உறுப்பினர் பதவி என்பது தேவைதானா? என்கின்ற நிலையே எமது மக்கள் மத்தியில் உருவாகின்றது. இது நியாயமான நிலைப்பாடு என்பதில் சந்தேகமில்லை.

மக்களிடம் பெறுகின்ற வாக்குகள் அந்த மக்களின் பணிகளுக்காக மாற்றீடு செய்யப்பட வேண்டும்;. அதனை சொந்த அரசியல் நலன்களுக்காக – அல்லது கட்சி அரசியல் நலன்களுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படுகின்ற நிலைமைகள் எப்போது தவிர்க்கப்படுமோ, அப்போதுதான் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுiகியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
யாழ் மாவட்ட நிலைமைகள் தொடரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரைய...