மீள் புனரமைக்கப்பட்ட கல்மடு குளத்தில் நன்னீர் மீன் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

கல்மடு குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில் அதன் அறுவடை ஆரம்ப நிகழ்வை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனூடாக கல்மடு பகுதியை சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட நன்னீர் மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடந்த ஜனவரி சுமார் ஓர் இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்தன
அத்துடன் நன்னீர் மீன் பிடியாளர்களின் நலன்கருதி அவர்களது தொழில் நடவடிக்கைகளுக்காக சிறு படகுகளும் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது
வழங்கிவைத்து மீன்பிடி நடவடிக்கைகளையும் சம்பிரத்ச்ச்யபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
முன்பதாக நாட்டில் நடைபெற்றுவந்த பயங்கரவாத யுத்தம் உக்கிரமடைந்திருந்த 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில்
புலிகளால் திட்டமிட்ட வகையில் உடைக்கப்பட்ட இந்த கல்மடுக் குளமானது விவசாயம் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நீர்ப்பாசன செழுமை’ திட்டத்துக்கமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் 800 மில்லியன் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த குளத்தில் நன்னீர் மீன்பிடியாளர்களின் நலன் கருதி மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்தன.
இன்நிலையில் குறித்த மீன்களின் அறுவடைக்காலம் வந்துள்ள நிலையில் இன்று (17.05.2024) மாலை கல்மடு குளத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் குறித்த நடவடிக்கைகளை மேற்கிண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|