மீண்டும் திறக்கப்பட்டது பேலியகொடை மீன் சந்தை! நிலமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 16th, 2020



பேலியகொடை மீன் சந்தை இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 பரவல் காரணமாக மூடப்பட்ட பேலியகொடை மீன் சந்தை இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இன்றுமுதல் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட்டுள்ளது.

முன்பதாக கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட குறித்த மீன் வர்த்தக கட்டிட தொகுதி, சுகாதார அமைச்சு மற்று ம் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக திறக்கப்பட்டள்ளது.

2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மூடப்பட்ட குறித்த சந்தை, இன்று முதல் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்ட நிலையில், அதிகாலை வேளையில் நேரடியாக சந்தை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தை செயற்பாடுகளை நேரடியாக அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் உரிமைகள் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பம் - டக்ளஸ் தேவானந...
இயலுமானவரை மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து...