மின்சார நெருக்கடி ஏற்படுமென ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, March 29th, 2019

இன்று இந்த மின் வெட்டு காரணமாக தொழில் முயற்சியாளர்கள் பலரும், வர்த்தக நிறுவனங்களைக் கொண்ட பலரும் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என்கின்ற நிலையில் மின்வெட்டு இடம்பெறுகையில், கைத்தொழிற்துறையில் பாதி நாள் உற்பத்திகள் பாழாகிப் போய்விடுகின்றன. எல்லா தொழிற்சாலைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் மின்பிறப்பாக்கிகள் இல்லை.

அவ்வாறு மின்பிறப்பாக்கி கொண்டு மின்சாரம் பெற்றாலும்கூட மறுபக்கத்தில் எரிபொருள் விலையைப் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. மேலும் எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைகள் வரலாம். அதற்கென அதிக நிதி வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டி வரலாம்.

தற்போதைய மின்சார நெருக்கடிக்கு தீர்வு மின்வெட்டு ஒன்றுதான் என்றால், அதன் பின்னணியில் ஏற்படுகின்ற மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானிக்க வேண்டும்.

இந்த நாட்டில் மின்வெட்டு இடம்பெறக் கூடுமென 2016ஆம் ஆண்டிலேயே தான் தெரிவித்திருந்ததாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்;வுகாண வேண்டுமாயின் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க வேண்டுமெனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக அவர் கூறுகின்றார். 

மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர்களும் ஏற்கனவே கூறியிருந்ததாகத் தெரிய வருகின்றது. அப்படி எனில் உரிய காலத்தில் ஏன் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள்; ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

Related posts:

விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  - அமைச்சரிடம் டக்ளஸ் தேவான...
புதிய ஆட்சியில் தீவகத்தை தொழில் துறையால் கட்டியெழுப்புவேன் - வேலணையில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!
இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்...

யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன...
ஓய்வுக்கு பின்னரும் ஓய்வின்றி உழைத்த சமூகப்பற்றாளன் சவுந்தரராஜா – அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம் டக்...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறை...