மாடுகள் திருட்டு அதிகரிப்பு – கால் நடை வளர்ப்போர் அமைச்சர் டக்ளசிடம் முறையீடு – கட்டுப்படுத்துவதாக பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி அமைச்சருக்கு வாக்குறுதி!

Saturday, December 24th, 2022


பருத்தித்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் திருடப்படுகின்றமை அதிகரித்துள்ளதாக, பிரதேச கால் நடை வளர்ப்பாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுச் சுகாதார உத்தியோகஸ்தர், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பருத்தித்துறை பிரதேச செயலாளர் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கலந்துரையாடல் இன்று  பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாக்குறுதிக்கு அமைய, கால அவகாசம் வழங்கி நிலமைகளை அவதானிப்பது எனவும், திருட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படாது தொடருமாயின், அடுத்த கட்டம் தொடர்பாக கூடி ஆராய்ந்து தீர்மானம் உறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். – 24.12.2022

Related posts:

வடக்கு மாகாணத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
கிராஞ்சி பகுதி கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தீவிர நடட...
யாழ்ப்பாணம் வருகைதந்தார் ஜனாதிபதி ரணில் - சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...