மன்னார் – முசலிப் பிரதேசத்தில் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்தியை மேற்கொள் பயனளர்களுக்கு இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, September 18th, 2022

மன்னார், முசலிப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு கடல்பாசி மற்றும் கொடுவா மீன் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முசலிப் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

ஏற்கனவே முசலிப் பிரதேசதனதினை சேர்ந்த 27 பயனாளர்களுக்கு கடல்பாசி செய்கைக்காகவும், 6 பேருக்கு கொடுவா மீன் வளர்ப்பதற்குமான முதற் கட்ட ஊக்குவிப்புத் தொகை சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட ஊக்குவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நீர்வேளாண்மை சார்ந்த பாசி, கொடுவா மீன் வளர்ப்பு, கடலட்டை  மற்றும்  பண்ணை முறையிலான கடலுணவு வளர்ப்பு போன்றவற்றை விருத்தி செய்வதன் மூலம், கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட மக்களிற்கு மேலதிக வாழ்வாதாரத்தினை ஏற்படுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பாசி வளர்ப்பை மேற்கொள்கின்றவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், கொடுவா மீன் வளர்ப்பிற்காக தலா  250,000.00 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-

000

Related posts:

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...
பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

வடக்கு கிழக்கில் நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம் - கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில...
நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும் - அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியி...
பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் பொருளாதார...