பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, February 19th, 2020

பங்களாதேஷ கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டள்ள இலங்கை மீனவர்களையும் அவர்கள் பயணம் செய்த நான்கு படகுகளை விடுவித்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் எல்லை தாண்டி பங்களாதேஸ் கடல் பரப்பினுள் நுழைந்த நிலையில் இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடிப் படகுகள் பங்களாதேஷ் கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று (19.02.2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் உடனடியாக கொழும்பில் உள்ள பங்களாதேஸ் உயர் ஸ்தானிகருடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் குறித்த மீனவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடடிவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்களின் விடுதலைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தங்களது திருப்தியை வெளியிட்ட கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் அடங்கிய குழுவினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் விடைபெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை!
மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்...