மன்னார் மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 1st, 2020

மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

கடந்த நல்லாட்சி காலத்தில் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்கள் தமது வாழ்வியல் தேவைக்கான கோரிக்கைகளுடன் கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

மன்னார் மாவட்ட கடல்தொழில் நீரியல் வள அலுவலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பொது அமைப்புகள் ,அரச உத்தியோகத்தர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை பலதரப்பட்ட தேவைப்பாடுகளுடன் வருகைதந்து அமைச்சரை சந்தித்து தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்துகொண்ட அமைச்சர் அவர்களது நியாயமான தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பியால் முடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்...
ஜா எல மீன்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை