மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. விலியுறுத்து!

Thursday, January 10th, 2019

கூட்டு மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. நேற்றும்கூட நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணம், மண்;டதீவு கிணறுகள் பற்றி பேசப்பட்டது. மன்னார் கூட்டு மனிதப் புதைகுழி தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் எடுத்து, அது தொடர்பில் ஆய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். விடயம் தெரியாத சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை – ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கiயில் –

செம்மணி புதைகுழி தோண்டப்பட்டு, அது தொடர்பில் நீதி விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு எம்மால் நடவடிக்கைகளை எடுத்திருக்க முடிந்திருந்தது. அதற்கான அரசியல் பலம் போதியளவு எங்களிடம் இருந்திருந்தது. இன்று அந்தளவிற்கான அரசியல் பலம் எங்களிடம் இல்லை. அந்த அரசியல் பலத்தினை எமது மக்களிடம் இருந்து பறித்து வைத்துக் கொண்டு, இன்று எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சியாக செயற்படுகின்ற தமிழ்த் தரப்பினர் ,ந்த விடயங்களை இன்றல்ல எப்போதோ முன்னெடுத்திருக்க வேண்டும்.

,துவரையில் மன்னார் கூட்டு மனிதப் புதைகுழியிலிருந்து சுமார் 282க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், இவை மன்னார் நீதிமன்ற வளாகத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரி வருகின்றன. இப்படியே இவை தொடர்ந்து களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தால், அவை பழுதடைந்துவிடக்கூடும்.

,வையிடையே பெண்களினதும், 14 சிறுவர்களினதும் என இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகளும் அடங்குகின்றன என்றும் மேலும், எலும்புக்கூடுகள் – மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருப்பதாகவும், இதுவரையில் புதைகுழியின் முடிவு – எல்லை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருவதாகவும் தெவிக்கப்படுகின்றது

இந்த மனிதப் புதைகுழியிருந்து தோண்டியெடுக்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகளின் காலகட்டம் தொடர்பில் கண்டறிவதற்கென  பிளொரிடா பீடா கனலிடித் இரசாயண கூடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி மனித எச்சங்களில் குறிப்பிட்டளவு (சாம்பல்) அனுப்பி காபன் டேரின் ஆய்வு மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்திருந்தது. எனினும், தற்போதைய நிலையில் ,வ்விடயம் தொடர்பில் நம்பிக்கையான தகவல்கள் எதுவும் வெளிவருவதாக இல்லை.

இதனிடையே, இங்கு தோண்டி எடுக்கப்படுகின்ற மனித எச்சங்கள் எந்தக் காலத்திற்குரியவை என்பது குறித்து இங்கு மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளின் மூலமாகத் தங்களுக்கே ஒரு முடிவுக்கு வர முடியுமென மேற்படி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிபணர்கள் சிலர் தெரிவித்திருந்ததாகவும், தேவை எனில், காபன் டேரின் ஆய்வின் மூலமாக அதனை மேலதிகமாக ஒப்பிட்டுப் பார்க்க முடியுமெனவும் அவரகள்; மேலும் தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தன.

எனவே, ,துவும் ஒரு கண்காட்சியாகி விடாமல் மன்னார் கூட்டு மனிதப் புதைகுழி தொடர்பிலான முன்னேற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட வேண்டும் என்றும், அவர்களின் மரணங்கள் பற்றி ஆராயப்பட்டு, குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அவை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

Untitled-8

Related posts:

கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோ...
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு - துரிதப்படுத்துமாறு து...

வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்...
கிளிநொச்சி, கிளியூரான் விளையாட்டுக் கழக புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!