இரணைதீவு கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா நேரில் களஆய்வு!

Wednesday, September 14th, 2016

இரணைதீவு பகுதி மக்களது பிரச்சினை குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் குறித்த பகுதி கடற்படை அதிகாரிக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவந்த தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் டக்ளஸ் தேவானந்தா என தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை இன்றையதினம்(14) மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா முன்பதாக இரணைமாதா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

1

இதன்போது நீண்டகாலமாக குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறுபட்ட இடர்பாடுகளை தாம் சந்தித்து வருவதாகவும் தமது பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலியுறுத்தினர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தகொண்ட டக்ளஸ் தேவானந்தா படகு மூலமாக இரணைதீவுக்கு சென்று குறித்த பகுதிக்கு பொறுப்பான கடற்படை அதிகாரியுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டு தற்போது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்படை அதிகாரிக்கு எடுத்துக் கூறி பிரச்சினைகளை தெளிவுபடுத்தினார். இதன் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

image-0-02-01-350827378d51bc234c574025a8999fa1826066a8c845d298b2e2119ac684d574-V

குறித்த கலந்துரையாடலின்போது குறித்த பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் மீனவர்கள் தொழில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று மற்றைய பகுதியான பெரியதீவு பகுதியிலும் கடற்றொழில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா கடற்படை அதிகாரியிடம் வலியுறுத்தினார்.

மேலும் கடற்றொழிலாளர்களது இயல்பு வாழ்க்கைக்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் இடையூறாக உள்ள இதர காரணிகளை நிவர்த்தி செய்வதற்கு குறித்த துறைசார் அமைச்சரது கவனத்திற்கு பிரச்சினையை கொண்டு சென்று தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கடற்றொழிலாளர்களிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

image-0-02-01-17cb4fd93c64b2d868d5cb4582c0084abc18cf42509fbcdf63090b8bf2642660-V

இரணைதீவுப் பகுதியில் கடந்த காலத்தில் 180 குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990 ஆம் ஆண்டு அங்கிருந்த மக்கள் வெளியேறி இரணைமாதா நகரில் தற்போது வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் இரணைதீவைச் சேர்ந்த மக்கள் தற்போது 370 மேற்பட்ட குடும்பங்களாக இரணைமாதா நகரில் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தன்னது.

image-0-02-01-975ca4431cae8a7cd3d07f32f77941d4b0191974d936377a114e28155d4394fc-V

கடற்றொழிலையே தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் இம்மக்கள் தமது தொழில் நடவடிக்கைகளை இயல்பான சூழ்நிலையில் மேற்கொள்ள முடியாத நிலையில் தமது பிரச்சினைகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரியப்படுத்தியதை அடுத்தே டக்ளஸ் தேவானந்தா இரணைதீவுக்காண திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-01-26a3834991fd189e24e3297f9a2cc4c4a80182f26b9f1aa90f4d95e3a9758af2-V

DSCF1764

image-0-02-01-92bba85f115d31fb0fcedf6e7b1ffbb803efb0cd91821022e0e44a595a4d3cf6-V

Related posts: