மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Saturday, February 1st, 2020
மன்னார் மாவட்டத்தின் கல்வித்தரத்தில் மட்டுமல்லாது விளையாட்டு துறையிலும் சாதனை படைத்து வரும் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என கடல் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் கல்லூரியின் அதிபர் G.T.மெரில் குரூஸ் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து விளையாட்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னர் உரையாற்றுகையில் –
இப்பாடசாலையின் ஆளுமையும் ஆற்றலும் இந்நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்பட்டுள்ள விதம் காட்டி நிற்கின்றது.
இந்தப் பாடசாலையின் ஆளணி வளங்களை மாற்றும் பாடசாலையின் தரத்தை தேசிய பாடசாலையாக உயர்த்தல், தளபாட பற்றாக்குறையை தீர்த்தல், போன்ற பல தேவைப்பாடுகளை தீர்த்து தருமாறு பாடசாலையின் அதிபர் கோரிக்கை விடுத்தார்.
நிச்சயமாக குறித்த கோரிக்கைகள் றிறைவுசெய்யப்பட வேண்டியவை.
மாணவர்களது எதிர்காலம் கருதியதான செயற்பாடுகளுக்கு எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கு.
அந்தவகையில் இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நான் முழுமையாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
Related posts:
|
|
|







