மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணி விவகாரம் – தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, September 19th, 2022

மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணிகள் தேசிய பூங்கா அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகளை விடுவித்த நிர்வேளாண்மைசார் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், விடயங்களை அறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனஜீவராசிகள் தொடர்பான துறைசார் அமைச்சருடன் அடுத்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடி பிரதேச மக்களுக்கும் நாட்டிற்கும் சிறப்பான முடிவினை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். – 18.09.2022

இனிடையே

எருக்கலம்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தனியார் முதலீட்டில் செயற்பட்டு வருகின்ற இறால் உற்பத்தி பண்ணையை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

ஆசியாவின் முன்னணி நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் செயற்பட்டு வருகின்ற குறித்த இறால் பண்ணையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூர்வாசிகள் தொழில் வாய்ப்பினை பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் 800 தொண் இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் - வவுனியா மாநாட்டில் செயலாள...
பக்கபலமாக நான் இருக்கின்றேன் - இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்கா...

வடக்கின் மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் ...
வடக்கு - கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே அவற்றுக்குத் துணை போகின்றனர் ...
சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் அதிகா...