மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

Friday, October 13th, 2017
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரன் அவர்களது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடி மேற்கொண்டுள்ளார். இதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் சடலம் நாளைய தினம் (14) கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற இவர், ஆஸ்திரேலிய அரசினால் மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் 09 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு கோரியிருந்ததாக மேற்படி இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் மேற்படி விடயம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, மேற்படி இளைஞனின் சடலத்தை அன்னாரது குடும்பத்திற்கு எவ்வித செலவுகளுமின்றி, உடனடியாக இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளார்.

Related posts:

எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் -  டக்ளஸ...
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்...

நல்லிணக்கம் என்றால் நல்லிணக்கம், கடும்போக்கு என்றால் கடும்போக்கு : இது நானும் பிரபாகரனும் மஹிந்தவிடம...
மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
வீடமைப்பு திட்டம் என்பது நடளாவிய பிரச்சினை - அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் - அமை...