பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் –  டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019

எமது மக்களின் பல பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுத்தந்து நிம்மதியான வாழ்வியல் சூழலுக்கு எம்மை இட்டுச் சென்றுள்ள நீங்கள் எமது பிரதேசத்தின் முழுமையான அபிவிருத்தி தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என பண்டத்தரிப்பு சாந்தைப் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாந்தை விநாயகர் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற மக்கள் குறைகேள் கூட்டத்தில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தபோதே குறித்தபகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இரந்தபோது எமது கிராமத்தைச் சேர்ந்த 30 க்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்திருந்ததுடன் இப்பகுதி மக்களது நெடுநாள் பிரச்சினையாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு பெரும் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பண்டத்திரிப்பிலிருந்து குழாய்வழிமூலமாக குடிநீரை பெற்றுத்ததிருந்தீர்கள்.

இதைப்போல வாழ்வாதார உதவிகள் பொது அமைப்புகளின் கட்டடம் உள்ளிட்ட தேவைப்பாடுகள் என பல்வேறு தேவைப்பாடுகளை எமக்கும் எமது கிராமத்திற்கும் பெற்றுத்தந்திருந்தீர்கள். அந்தவகையில் நாம் என்றும் உங்களுக்கு நன்றியுணர்வு உள்ளவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம்.

ஆனாலும் எமது கிராமத்தின் வளர்ச்சி இன்னும் மேம்பாடடையவெண்டிய தேவைப்பாட காணப்படுவதால் எமது பிரதேசத்தின் முழுமையான அபிவிருத்திக்கு தாங்கள் மேலும் அதிக அக்கறை  செலுத்தி எமது மக்களதும் கிராமத்தினதும் அபிவிருத்தியை முழுமை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தமது பகுதியில் பொது ஆலயம் ஒன்று அமைப்பு, சனசமூக நிலையத்தின் புனரமைப்பு மற்றும் அதற்கான காணி கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் உதிவித்திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான்நதா அவர்கள் காலக்கிரமத்தில் அவற்றை பெற்றுத்த தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுடன் எமது கரங்களுக்கு மேலும் அதிகரித்த அரசியல் பலத்தை மக்கள் வழங்கும் பட்சத்தில் இக்கிராமமல்ல தமிழ் மக்களின் வாழிடங்கள் தோறும் சுபீட்சத்தை ஏற்படுத்திக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன்,  கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

IMG_20190105_180712

IMG_20190105_181517

Related posts:

யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் - செய...
கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்...