எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, May 25th, 2018

வட இலங்கையின் சுதேச வளங்களில் ஒன்றாக எமது பண்பாட்டுக் காலத்துடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பனை வளத்தினை நம்பிய நிலையில் நேரடி மற்றும் மறைமுக தொழில் நடவடிக்கைகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

எமது பகுதிகளின் வளங்களைப் பொறுத்தவரையில் விவசாயம், கடற்றொழில் போன்ற இரு பிரதான தொழிற்துறைகளுக்கு அடுத்த  நிலையில், பனை சார்ந்த உற்பத்திகளின் மூலமாக தங்களது ஜீவனோபாயத்தினைக் கொண்டு நடாத்துகின்ற மக்களே பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயத் துறையினை எடுத்துக் கொண்டால், தொடரும் காலநிலை மாற்றங்களால் எமது விவசாய மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், காட்டு மிருகங்களின் தொல்லைகளும் எமது மக்களின் விவசாய செய்கைகளை அடிக்கடி பாதிப்படையச் செய்கின்றன.

கடற்றொழிலை எடுத்துக் கொண்டால், இந்திய கடற்றொழிலாளர்களது எல்லை தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில்கள் மற்றும் அத்துமீறியதும், தடைச் செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான பிற மாவட்டங்களின் கடற்றொழிலாளர்களின் கடற்றொழில்கள் காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் கடற்றொழில் செய்ய இயலாத நிலைமைகள் தொடர்ந்து இருந்து வருவதுடன், எமது கடற்றொழிலாளர்களது தொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டும், எமது கடல் வளம் சுரண்டப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றது.

இந்த நிலையில் எமது மக்களின் பிரதான வாழ்வாதாரங்களாக எமது பகுதியிலுள்ள மண் மற்றும் கடல் வளங்களால், எமது மக்களுக்கு உரிய வாழ்க்கையினை போதியளவு வழங்க இயலாத நிலை காணப்படுகின்றது. இந்த இரு தொழில் துறைகளும் சாராத மக்களில் பலருக்கு வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் ஒரு துறையாகவே பனை வளம் காணப்பட்டது. இன்று, இத்துறையும்கூட எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போகின்ற நிலையும் காணப்படுவதுதான் எமக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக இருக்கின்றது.

Related posts:

எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் - கிளிநொச்சி யில்...
பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடல்!
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் - மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் ...
யாழ் சிறைச்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - விளக்க மறியலிலுள்ள இந்தியக் மீனவர்களை சந்தித்துக் கலந்த...
பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி - தேவிபுரம் தையல் உற்பத்தி நிலையத்தி...