மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

Thursday, January 6th, 2022

யாழ். மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று  அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு மற்றும் இலங்கை தனியார் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த படகு கட்டும் தொழிற்சாலை மூலம் மண்கும்பான் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான பொருளாதார நன்மைகளையும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2009 இற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்திகளை உருவாக்கி, அழிந்த வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்ற வேலைத் திட்டத்தின் வெளிப்பாடாக இவ்வாறான தொழிற்பேட்டைகள் எமது பிரதேசங்களில் தற்போது உருவாகி வருவதாக இந்த படகு கட்டும் தொழிற்சாலையை அங்குரார்ப்பனம் செய்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே படகு கட்டும் தொழிற்சாலை பணிகளுக்கான ஒரு வருடப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார். 

மண்கும்பானில் வெளிநாட்டு – உள்ளூர் தனியார் முதலீட்டாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலைக்கான பணியாளர்களாக  பிரதேச இளைஞர் யுவதிகள்  தெரிவு செய்யப்பட்டு பயிற்சியளிப்பதற்கு முதலீட்டாளர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்புக் கருதியும் உழைக்க முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்...
உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆல...