மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து ஆராய்வு!

மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் கள விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டிருந்தார்.
மணியம்தோட்டம் கடற்றொழிலாளர் சங்கத்தினரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த விஜயம் அமைந்துள்ளது.
இதன்போது குறித்த பகுதி கடல்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது எதிர் பார்ப்புக்கள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது தமது பிரதேசத்தில் கடல்றொழிலாளர் நன்மை கருதி கடலுணவுகளை விற்பனை செய்வதற்கு ஏற்றவகையில் கூறுவிலை மண்டபம் ஒன்றினை அமைத்து தருமாறு கோரிக்கை முன் வைத்தனர்.
குறித்த கோரிக்கையின் அவசியம் தொடர்பில் கருத்தில் கொண்ட அமைச்சர் காலக்கிரமத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொடுக்கும் நல் வழிகாட்டிகளாக செயற்படுங்கள் - தோழர்கள் ம...
நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம்: கடுமையாக கண்டிக்கிறது ஈ.பி.டி.பி!
மணிவண்ணனின் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை...
|
|