மணியந்தோட்டம் குமரக்கோட்ட முருகன் ஆலய புனரமைப்பிற்காக அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி !
Monday, June 17th, 2024
மணியந்தோட்டம் குமரக்கோட்ட முருகன் ஆலய புனரமைப்பிற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மணியந்தோட்டம் குமரக்கோட்ட முருகன் ஆலைய நிர்வாகிகளால் ஆலய புனரமைப்பிற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்து கலாசார திணைக்களத்தின் 2024 இற்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கிடைக்கப்பெற்ற இரண்டு இலட்சம் நிதியுதவியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைத்தார்.
இதனிடையே மணியந்தோட்டம் சனசமூக நிலையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலர் பாடசாலைக்கான அடிக்கல்லையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார்.
பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கல்லை நாட்டி வைத்து நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே
தெல்லிப்பழை, நாமகள் விளையாட்டுக் கழகத்தினரின் கோரிக்கைகளுக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து சுமார் 75,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது
அத்துடன் விளையாட்டு மைதானத்துக்கு மின்விளக்குகளை பொருத்துவதற்கான ஏற்பாடுகளும் அமைச்டசரது நிதிப் பங்களிப்புடன் செய்து கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


