மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவசர கோரிக்கை!

Monday, May 10th, 2021

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். செயலகத்தில் இன்று (10.05.2021) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், தங்களது குடும்ப சூழ்நிலைகளையும் தற்போதைய கொறோனா சூழலில் குடும்பங்களை பிரிந்து செல்வதால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களையும் எடுத்துக்கூறிய ஆசிரியர்கள், கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தமது கற்கை செயற்பாடுகளை தொடர்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து சம்மந்தப்பட்ட தரப்புக்களின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:


மீள் குடியேற்றம் தொடர்பிலான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருத்தல் வ...
அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட...
கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட விரும்புவோருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெ...