மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 6th, 2016

கட்சியின் செயற்பாடுகள் வட்டாரரீதியான கட்டமைப்புகளுடாக அமைக்கப்படும் போதுதான் மேலும் பலமிக்க கட்சியாக எம்மை வலுப்படுத்திக்கொள்ள முடியும். அத்தகைய எதிர்பார்ப்புகளுடன்தான் தற்போது எமது கட்சியின் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் வலுவாக செழுமைப்படுத்தி வருகின்றோம். இத்தச் செயற்பாடுகளை உங்கள் அர்ப்பணிப்பு மிக்க ஈடுபாட்டின்முலம் வெற்றியடையச் செய்வீர்கள் என்ற நம்பிக்கைஏற்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில்; நடைபெற்ற யாழ்.மாவட்ட வட்டார ரீதியான நிர்வாக குழு உறுப்பினர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

111

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதைய வேலைத்திட்டத்தினூடாக கட்சிக்குள் உள்வாங்கப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் கட்சியின் கொள்கைகளையும் மக்களுக்கான பணிகளையும் சீர்தூக்கிச்செல்பவர்களாக இருக்கவேண்டும். மாறாக கட்சியின் கொள்கைகளுன் இணங்காது கட்சியின் பெயரால் தவறான செயற்பாடுகளை மெற்கொள்வார்களாக இனங்காணப்பட்டால்;; அத்தகையவர்களுக்கெதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

1

சிறந்த ஆரம்பமே ஒரு இலக்கின் பாதிப்பங்கை வென்றெடுப்பதற்கான அத்திவாரமாக அமைகின்றது. நாம் தற்போது கட்டியுள்ள இந்த வட்டார ரீதியான அமைப்பு முறை எமது கட்சிக்கு மேலும் பலத்தை சேர்க்க வழிவகுக்கும் என  நம்புகின்றேன். குறித்த கட்டமைப்பின் வெற்றிக்காக எமது அரசியற் செயற்பாடுகளை கட்சியின் உறுப்பினர்களும் பொறுப்பு மிக்கவர்களும் சரியாக வழிநடத்தி நகர்த்திச்சென்றால் நாம் நிச்சயம் சிறந்ததொரு அடைவுமட்டத்தை பெற்றுக்கொள்ளமுடியும். அதற்காக நாம் எமது சக்தியையும் இருக்கின்ற வளங்களையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றிகாண உழைக்கவேண்டும்.

2

மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் மதிப்பளிக்கின்றேன். அதனால்தான்; மக்களது உரிமைகளுக்காகவும் அபிவிருத்திக்காகவும் மத்தியில் இணக்க அரசியல் பாதையூடாக அயராது உழைத்துவந்திருக்கின்றேன். தொடர்ந்தும் எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களது பங்களிப்புகளுடன் பயணித்து நாம் எடுத்தக்கொண்ட இலக்கான ஒளிமயமான வாழ்வை  தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வரை ஓயாது உழைப்பேன் என தெரிவித்தார்.

Related posts:

மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்கள் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம் - அமைச்சர் டக்ள...
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட ...