ஊர்காவற்றுறையில் கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Monday, December 27th, 2021

நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் திட்டத்திற்கு அமைய ஊர்காவற்துறையில் தெரிவு செய்யப்பட்ட கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

அந்தவகையில் கொடுவா மீன் வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் தலா 250,000 ரூபாயும் கடற்பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தலா 100,000 ரூபாயு ம் வழங்கப்படவுள்ள நிலையில் முதல் கட்ட காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன

இதேவேளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஊர்காவற்துறை பிரதேசத்தினை சேர்ந்த 10 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

வேலணை புங்குடுதீவிற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீ முருகன் கிராமிய அமைப்பின் மண்டபத்தில் பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாலிலும் கலந்து கொண்டார்.

இதன்போது சுமார் 88 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், பெரும்பாலானவர்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள நிலையில், வாழ்வாதார உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அத்துமீறிய கடற் தொழிற் செயற்பாடுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தே...
எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ...
'நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!' தேசிய செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிளிநொச...