மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கில் கிளிநொச்சி கண்ணகைபுரத்தில் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, May 9th, 2024
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கிலான மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற கண்ணகைபுரம் கிராமத்தின் அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் ஒர் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் திட்டத்தில் ஊடக கிளிநொச்சியில் கண்ணகைபுரம் கிராமம் தெரிவாகி அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
தோழர் சிறீகாந் அவர்களது தந்தையாரது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!
|
|
|


