கடலில் காவியமான தோழர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உணர்வஞ்சலி மரியாதை!.

Monday, July 8th, 2019

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சக தோழர்களும் படகேறி இந்தியா செல்லும் பயணத்தின் போது உன்னத தோழர்கள் எழுவர் கடலில் காவிமான தினம் இன்றாகும்.

கடலில் காவியமான தோழர்களை நினைவுகூருவதுடன் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலிமரியாதை செலுத்துகின்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும், அதன் மத்திய குழு மற்றும் அரசியல் பீட உறுப்பினராகவும் பிரதம தளபதியாகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றைய காலப்பகுதியில் இயக்கத்திற்கு உள்ளேயும், போராட்ட இயக்கங்களுக்கு இடையேயும் உருவாகிக் காணப்பட்ட முரண்பாடுகளை பேசித்தீர்க்கும் நோக்கோடு 07.06.1986 இல் சக தோழர்கள் 19 பேருடன் இந்தியா நோக்கி பயணமாகியிருந்தார்.

கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்த இலங்கைக் கடற்பரப்பில் ஏற்பட்ட அந்த விபத்தின் போது தோழர் சுகிர்தன், தோழர் ஞானம், தோழர் நாகராஜா, தோழர் செண்பகன், தோழர் இமாம்,தோழர் எட்வேட், தோழர் அசோக் ஆகிய ஏழு தோழர்கள் தமது இன்னுயிர்களை கடலில் ஆகுதி ஆக்கிக்கொண்டனர்.

செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் தோழர்களான ஜீவன், கேதீஸ், உதயன், விசுவா, நந்தன், லிங்கேஸ், றமணன், கலீல், காமினி மற்றும் அன்ரன் ஆகியோர் மரணத்தின் ஆபத்தில் இருந்து உயிர் மீண்டு கொண்டனர்.

சக தோழர்களின் விருப்பங்களை ஏற்று அர்பணிப்பு நிறைந்த துணிச்சலுடன் கரம் கொடுத்த தோழர் கேதீஸ் அவர்களின் துணையோடும் தனது இடைவிடாத தன்னம்பிகையுடனும் நீந்திக்கரை சேர்ந்து அன்று மறு பிறப்பெடுத்திருந்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

உயிர் ஆபத்தில் இருந்த ஏனைய தோழர்கள் குருநகர் மக்களின் படகு ஒன்றின் உதவி மூலம் உயிர் பாதுகாக்கப்பட்டனர்.

இறந்த தோழர்கள் எழுவரையும் நெஞ்சில் நினைவேந்தி உணர்வெழுச்சியுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம்!….

உறுதியில்

விழித்து,…

குருதியில்

குளித்து,…

விதயாகிப்போனவர்

வாழ்வு வெறும்

கதையாகிப்போகுமா?…

நீடித்த நிமிர்வும்

நிம்மதிப்பெருவாழ்வும்

வாசலில் வந்தெங்கள்

வசந்தமாய் வீசும்..

அக்கினிக்குஞ்சுகளே

அஞ்சலிக்கிறோம்!

Related posts:


பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...
நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உ...
வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...