தோழர் சிறீகாந் அவர்களது தந்தையாரது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!
Sunday, August 11th, 2024
யாழ்ப்பாணம் அராலி தெற்கு வட்டுக்கோட்டை மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட (சிற்பாலய கட்டட ஒப்பந்தகாரர்) அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் அராலி மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம் 10.08.2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
இந்நிலையில் அன்னாரது இல்லத்திற்கு சென்ற அமைச்சர் அமரரது பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக இணைப்பாளர் தோழர் ஸ்ரீகாந் அவர்களின் தந்தையார் என்பதுடன் தினமுரசு வாரமலர் பத்திரிகையின் ஸ்தாபக்கர் தோழர் ரமேஷ் – அற்புதனின் மூத்த சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
.
Related posts:
|
|
|


