கிளிநொச்சி ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – உற்பத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு!
Wednesday, July 3rd, 2024
கிளிநொச்சி தர்மபுரத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் சர்வதேச தரத்திற்கு ஈடாக உற்பத்தி செய்யப்படும் (அக்ரோ) ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் உற்பத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டர்.
குறித்த விஜயம் இன்று (03.07.2024) முற்பகல் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி அதனை சர்வதேச தரத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகளுக்கு ஏதுவாகவும், சுயதொழில் முயற்சியாளர்களின் சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்காகவும் பல்வேறு முயற்சிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்’டு வருகின்றது.
அதன் அடிப்படையில் குறித்த ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மேம்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார்.
வடமாகாணத்தில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ‘லங்காஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செய்கையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் மட்டுமன்றி இச்செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வத்தினை தூண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|
|


