டக்ளஸ் தேவானந்தாவை எமது உயிருள்ளவரை மறக்கமாட்டோம் – காணாமல்போய் மீண்டுவந்து நன்றி கூர்ந்த கடற்றொழிலாளி !

Saturday, June 18th, 2016

எம் உயிருள்ளவரையில் நாம் மறக்க முடியாதவராகவும் எமது வாழ்வுக்கு ஒளியூட்டியவராகவும் விளங்குபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என பொலிகண்டி கடற்பரப்பில் காணாமல்போய் மீண்டுவந்த பீற்றர் அன்ரனி ரஜிந்தனின் மனைவி கண்ணீர்மல்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இன்றையதினம் (18) வருகைதந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எனது கணவர் கடந்த 9 ஆம் திகதி தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். குறித்த சம்பவத்தை அறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் வருகைதந்து எமக்கு ஆறுதல் அளித்தார்.

அதுமட்டுமன்றி காணாமல் போன எனது கணவர் தொடர்பாக அதிக அக்கறையுடன் இந்தியத் தூதரகம், இலங்கை கடற்படை மற்றும் வான்படை உள்ளிட்ட துறைசார்ந்த அரச திணைக்களங்களினூடாக தகவல்களை பெற்றுக்கொண்ட அதேவேளை காணாமல்போன எனது கணவர் தொடர்பில் விரைவான நடவடிக்கையினை எடுக்குமாறும் கோரிக்கைவிடுத்திருந்தார். இதனையடுத்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எனது கணவர் பத்திரமாக இலங்கை கடற்படையினரது உதவியுடன் கரைவந்து சேர்ந்தார்.

எனது கணவர் வீடுவந்து சேர்வதற்கு முழுமையான அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது வாழ்நாளில் மறக்கமுடியாதவர்களாக வாழ கடைமைப்பட்டுள்ளோம் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

மேலும் தனது கணவர் காணமல் போன நாளிலிருந்து இன்றுவரை வேறு எந்த ஒரு பிரதிநிதிகளும் எம்மிடம் வந்து இது தொடர்பாக கேட்டறிந்து கொள்ளவோ அன்றி ஆறுதல் கூறவோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக காணாமல்போய் மீண்டுவந்த பீற்றர் அன்ரனி ரஜிந்தன் கூறுகையில் – தான் திரும்பவும் வீடுவந்து சேருவேன் என்று ஒரு துளிகூட நம்பியிருக்கவில்லை என்று தெரிவித்த அவர் தான் மீட்கப்பட்டு வீடுவந்து சேர்ந்த பின்னர் தான் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொள்வதற்கு  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த முயற்சிகள் தான் காரணம் என்று தனது குடும்பத்தினர் கூறியதை கேட்டு தான் கண்ணீர் விட்டு அழுததாகவும் அதன் காரணமாகவே இன்று தான் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.

DSCF0279

DSCF0294

DSCF0295

DSCF0685

 

 

 

Related posts:


கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...
வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளர் தொடர்பில் சுமகமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும்!
மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் - நாடா...