மக்களை வலுப்படுத்தும் வகையிலான மாற்றங்களை உள்வாங்கி திடமாக நாட்டை முன்னேற்றுவதற்கு அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, January 2nd, 2023

பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கு அமைய மக்களை வலுப்படுத்தும் வகையிலான மாற்றங்களை உள்வாங்கி திடமாக நாட்டை முன்னேற்றுவதற்கு அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பிறந்திருக்கின்ற 2023  ஆண்டில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.

இதன்போது, தேசியக் கொடியினை ஏற்றி வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய வருடத்திற்கான உறுதிமொழியைத்  தொடர்ந்து உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே.  தயானந்தா மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், நிறைவேற்றுப் பணிப்பாளர்கள், கற்றொழில் அமைச்சரின் செயலாளார்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

00

Related posts:


அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு - கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத்...
நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு - சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க ...