மக்களை தவறாக வழிநடத்துகின்றவர்கள் தரமாக வாழுகின்றனர் – அமைச்சர் தேவானந்தா ஆதங்கம்!

Tuesday, March 2nd, 2021

தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்ற தலைமைகள் தரமான வாழ்கை வாழ்வதாக குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகருவதே சரியான வழிமுறை எனவும் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் இழபீடுகளிற்கான அலுவலகத்தின் மூலமாக இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று (02.02.2021) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி உரையாற்றுகையிலேயே கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் ரெிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகருவதன் மூலம் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தனது குறித்த அணுகுமுறைக்கு போதிய மக்கள் ஆதரவு கிடைக்குமாயின் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய தினம்,30.25 மில்லியன் தொகையில் 392 கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.

அதற்கு அமைவாக பொதுமக்கள் சொத்து இழப்பிற்காக 350 பேருக்கும், அரச ஊழியர் இழப்புக்காக 25 பேருக்கும், காயம் மற்றும் இறப்புகளிற்காகன தொகை 08 பேருக்கும், சேதமடைந்த கோவில்களிற்கான இழப்பீடு்டு தொகைகள் 09 கோவில்களிற்குகும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்தவர்கள் எனும் அடிப்படையில் பொதுமக்கள் சொத்து இழப்புக்களிற்காக 9690 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், அதில் 5488 பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் 4202 பேரால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு வழங்கப்பட வே்ணடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று அரச ஊழியர்களால் 1590 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் 1448 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

காயம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்காக 5155 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவு்ம, அதில் 4649 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சேதமடைந்த கோவில்கள் தொடர்பில்  68 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் அவற்றில் 55 கோவில்களிற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

000

Related posts:

யுத்தத்தை வென்ற போதும் தமிழ் மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்படவில்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்  - டக்ளஸ் தேவானந்த...
மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டகள்ஸ...