பறிபோகவுள்ள வாழ்வாதாரத்தை மீட்டுத் தாருங்கள் – யாழ் பேருந்து நிலைய சிறுகடை வியாபாரிகள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Sunday, June 24th, 2018

யாழ்.மத்திய பேருந்து நிலை­ய பகுதியில் இயங்கிவரும் சிறுடை­களை அகற்றுவதற்கு யாழ் மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம் பறிபோகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் குறித்த பாதிப்பிலிருந்து தமக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா அவர்களிடம் பாதிக்கப்பட்டுள்ள சிறுகடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட சிறுகடை உரிமையாளர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்­பா­ணம் மத்திய பேருந்து நிலை­யத்­தைச் சுற்றி அமைக்கப்பட்டு இயங்கிவரும் சிறுடைகள் எதிர்­வ­ரும் 14 நாள்­க­ளில் உடைத்து அகற்­றப்­ப­டும் என்று மாந­கர முதல்­வர் ஆர்னோல்ட் கடந்த மாநகர அமர்வில் தெரிவித்திருந்தார்.

மாநகர சபையின் இந்த செயற்பாட்டால் குறித்த பகுதியில் சிறுகடைகளை அமைத்து தமது குடும்ப வாழ்வாதாரத்தை கொண்டுசெல்லும் சுமார் 68 சிறுகடை உரிமையாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர். அத்துடன் தமது தொழில் வாய்ப்பும் இதனூடாக பறிக்கப்படும் சூழல் உருவாகின்றது.

அந்தவகையில் தமது வாழ்வாதாரத்தை பாதிக்கவுள்ள குறித்த மாநகசபையின் முடிவை மாற்றியமைத்து தமக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா –

மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளை முன்னிறுத்திய எந்த செயற்பாடுகளுக்கும் தடை போடுவதானது எமது மக்களின் வாழ்க்கையே பாதிக்கின்றது. அந்தவகையில் பாதிக்கப்படவுள்ள குறித்த சிறுகடை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு தான் முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

இதனிடையே கட்சியின் யாழ் மாசகரசபை உறுப்பினர்களான றெமீடியஸ், கா வேலும்மயிலும் குகேந்திரன், அனுசியா, றீகன் ஆகியோர் நேரில் சென்று கறித்த பிரச்சினை தொடர்பிலா கள நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.

Related posts:

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள் - வலி வடக்கு மக்கள் மத்தியில் டக்ள...
நாம் ஒருபோதும் பிரதி உபகாரங்களுக்காக எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்தது கிடையாது - சாவகச்சேரியில...
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈட...