மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை : வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 28th, 2022

நாடளாவிய ரீதியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய  வட்டாரத்திற்கு தலா 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்  ஊடான அபிவிருத்தி திட்டங்களுக்கு  உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும்  வேலைத்திட்டங்களையே தெரிவு செய்வதுடன் அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வேலணை பிரதேச செயலகத்தில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற  வட்டாரங்களுக்கு தலா 4 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம்  வேலணை ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய தீவகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மக்களுடைய வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்கு பிரதேசங்களின் உட்கட்டமைப்புக்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றபோதிலும் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியை மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கக் கூடிய உற்பத்திசார் அபிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts:

கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் - முல்லைத்தீவில் டக்ளஸ் தே...
மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் - அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக...
விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து மரியாதை நிமிர்த்தம் ...

நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுற - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக...
மீன் ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டிற்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவான...